மாநாடு 14 February 2022
எது காதல்?
உதடுகள் ஒட்டலும்
உடல்கள் உரசலும்
சீண்டலும் சிணுங்கலும்
கொஞ்சும் மொழி பேசி
குழந்தை பருவ மேனியோடு கூடிக்குலாவி
அழகு இருக்கும்போது மட்டும் அருகிலிருந்து
மறப்பதா காதல்?
சுருங்கிய தோலும்
நரைத்த மயிரும்
நரைக்காத நினைவுகளும்
எப்போதும் உயிர் போகும்
எனும் நிலையிலும்
என் உயிரே நீயாகவும்
நீயே நானாகவும் வாழ்ந்திருந்து இறப்பதே காதல் !
-க.இராம்குமார்
178410cookie-checkஎது காதல்