மாநாடு 20 August 2022
சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் குறிப்பிடப்படும் படியான இடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு நடக்கும் விபத்துக்கள் பெரும்பாலும் அலட்சியங்களாலும், சாலை விதிகளை கடைப்பிடித்து முறையாக பயன்படுத்தாததாலும், மது அருந்திவிட்டு போதையில் வருபவர்களாலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பல ஊர்களில் பல பகுதிகளில் சாலைகள் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது இதை ஒவ்வொரு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் கண்டு உணர்ந்து இருக்கிறார்கள். சாதாரணமாக ஒழுங்காக பொருட்கள் ஏற்றப்பட்டு செல்கின்ற வாகனங்களே சாலைகளில் இருக்கின்ற குண்டு குழிகளில் விழுந்து பொருட்கள் கீழே விழுவதை அவ்வப்போது காண முடிகிறது .
தமிழ்நாடே இப்படி இருக்க அதிலும் தஞ்சாவூர் கும்பகோணம் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றது இந்த சாலைகளில் பாரம் ஏற்றிக்கொண்டு செல்கின்ற லாரிகளில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யாமல் ,தார்ப்பாய்களை வைத்து மூடி செல்லாமல் வெறுமனே மணல் ஏற்றி செல்வதும் , செங்கல் ஏற்றிச் செல்வதும்,
இது போன்ற பல பொருட்களை ஏற்றி செல்வதும் தொடர்ந்து தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் பெண்களை கூட்டிக்கொண்டு செல்கின்ற வாகன ஓட்டிகளும், பல்வேறு பணிகளுக்காக இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் மகளிர்களும் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
தஞ்சாவூர் -கும்பகோணம் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பயணிகள் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப் படும் இந்நிலையில் இது போன்ற விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக தினந்தோறும் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் லாரிகளை எச்சரித்து, போன்ற செயல்களில் அலட்சியமாக இருப்பதை தடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். சமூக ஆர்வலர்களின் சத்தம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கேட்குமா ?