Spread the love

மாநாடு 4 December 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திட்ட பச்சை துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பார்வையற்றோர் சங்கங்கள் பன்நாட்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து நேற்று 03/12/2025 காலை 09:30
மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, திருப்பத்தூர் 4 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் அருகிலும், தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகிலுள்ள பனகல் கட்டிடம் முன்பு கொட்டும் மழையில் நனைந்தபடியே நடைபெற்றது.


தன் உரிமைக்காக பிறப்பு முதல் போராடி வென்று வாழ்ந்து வரும் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் அனைத்து நிலையிலும் ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வரும் அனைவருக்கும் என்று தொடங்கி கீழ்க்கண்டவாறு தொடர்ந்தார்கள்

அதன் விவரம் பின்வருமாறு :
எங்களது அமைப்பானது பல ஆண்டுகளாக தமிழக அரசிடம், அரசு, அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், அரசு தன்னாட்சி நிறுவனங்கள், கழகங்கள் வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் உள்ள தொகுதி-1, தொகுதி-2, தொகுதி -3 தொகுதி-4 ஆகிய பிரிவுகளில் உள்ள மொத்த பணியிடங்களை கணக்கிட்டு, 1981ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை நிலை எண் 602, ஊனமுற்றோர் சட்டம் 1995 (PWD Act 1995) பிரிவு 33 மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 (RPD Act 2016) பிரிவு 34 மற்றும் 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பணியிடங்களைக் கணக்கிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான 4 விழுக்காட்டினை குறிப்பாக பார்வையற்றோருக்கான ஒரு விழுக்காட்டினை உறுதி செய்து, பணி நியமனம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில் 2021 தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் (எண் 294) மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள 4 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான வாக்குறுதிகளை வழங்கியது தி.மு.க

Thanks to : ThanthiTv, News18 Tamil, Puthiya thalaimurai TV

வெற்றிப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சங்கம் 23/06/2021 அன்று பணி வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் முதலமைச்சர் தனிப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்கள், செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கி வந்தது.
08 ஆகஸ்டு 2021 அன்று இணைய வழியாக கோரிக்கை விளக்க மாநாடு நடத்தப்பட்டது இதில் பங்கேற்ற காங்கிரஸ் குழுத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை , வி.சி.க தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் சார்பாக பாலசிங்கம் , இந்திய கம்யுனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மாண்புமிகு முத்தரசன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்று உங்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் 17 ஏப்ரல் 2023 அன்று தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாக கணக்கிட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். 24 ஜூலை 2023 அன்று அரசாணை எண் 20 வெளியிடப்பட்டது. அதில் சங்கம் கோரிக்கை வைத்தது போல, அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை சுணக்கில் கொண்டு. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை அரசின் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின்கீழ் பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளிகளை (சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அரசாணை நிலை எண் 151 நாள் 16.10.2008) வரன்முறைப்படுத்திக் (Regularize) காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைப் படித்த பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் இனி தங்கள் வாழ்வில் தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டியதில்லை என்று கொண்டாடித் தீர்த்தனர் ஆனால் அந்த கொண்டாட்டம் சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஓராண்டிற்குள் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் இட ஒதுக்கீட்டின்படி பணி இடங்கள் கணக்கிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தகு சிறப்பு மிக்க அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் பணிவாய்ப்பு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே வேறு வழி இன்றி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் 12 பிப்ரவரி 2024 முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டது. அப்போது 13 பிப்ரவரி 2024 அன்று தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சிறப்பு ஆட்சேர்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை சங்கத்தினரிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் 24 ஜூலை 2023 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, 31 ஜூலை 2023 அன்று அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், 4 செப்டம்பர் 2023 முதல் 15 செப்டம்பர் 2023 வரை காணொலி வாயிலாக அரசாணைக் குறித்து அனைத்து துறைத் தலைவர்களுக்கும் எடுத்துரைத்து விளக்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும், 103 துறைத் தலைவர்களிடமிருந்து வெற்று அறிக்கை கிடைத்ததாகவும், அறிக்கை அனுப்பிடாத 53 துறைகளுக்கு 25 10 2023 மற்றும் 22.12 2023 நேர்முக கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. 53 துறைகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி தொகுதி 11, தொகுதி B 500, தொகுதி CS50 தொகுதி D 539 என மொத்தம் 2010 பணி இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 21 பிப்ரவரி 2024 அன்று போராட்ட களத்திற்கு வந்த அமைச்சர் கீதா ஜீவன் மாற்றுத் திறனாளிகளுக்காக இதுவரை 2010 பணி இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து மற்ற துறைகளில் கண்டறியும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணி நிறைவடைந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மொத்த பணி இடங்களுக்கும் சேர்த்து வரும் ஜூலை 2024-ல் சிறப்பு
ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என்று உறுதிப்படுத்தி ஊடகங்களுக்கு

நேர்காணல் வழங்கினார். மேலும், 27 பிப்ரவரி 2025 அன்று பணிவாய்ப்பு உள்ளிட்ட 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அரசு இதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் சங்கம் 27 பிப்ரவரி 2024 அன்று போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அமைச்சர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை செயலர், இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறியது போல ஜூலை 2024க்கு பிறகும் சிறப்பு ஆட்சேர்ப்பு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் உடனடியாக அரசாணை எண் 20-ஐ நடைமுறைப்படுத்தக்கோரி உரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து கடிதங்கள் வழங்கப்பட்டு வந்தது. மாதங்கள் பல கடந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வேறு வழியின்றி, 12 மார்ச் 2025 அன்று பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும், 19 ஆகஸ்டு 2025 அன்று தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கமும் போராட்டங்களை நடத்தியது. அப்போது அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் விரைவில் சிறப்பு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் நீங்கள் அதற்கு ஆயத்தமாகுங்கள் என்று நம்பிக்கை மொழிகளைக் கூறி உறுதியளித்துவந்தார்.
அமைச்சரால் அறிக்கை வழங்கப்பட்டு 20 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில்

பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பணியும் இல்லை பணி நிரந்தரமும் இல்லை அரசாணை 20 மற்றும் அரசாணை 151 எதுவும் செல்லாது என்று 31 அக்டோபர் 2025 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 24 மூலம், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டப் பேரவையில் அறிவித்தது. அரசாணை வெளியிட்டது. போராட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிக்கை என அத்தனையையும் பொய்யாக்கி, மாற்றுத் திறனாளிகளை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது தமிழக அரசு.
எனவே தமிழக முதல்வர் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ள இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்து, அரசாணை எண் 20-ல் குறிப்பிட்டுள்ளபடி சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தி, பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டி நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஒடுக்கப்படும்போதெல்லாம் சுயமாக போராடி தடைகளைத் தகர்த்து வாழ்ந்து வருகிறோம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை வென்றெடுக்க வேண்டுமென்று நினைக்கும் ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என அனைவரும் இந்த அறப்போராட்டத்தில் இணைந்து நீதியை வென்றெடுக்க ஒத்துழைக்க வேண்டு்ம் வெளி உலகத்திற்கு எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

85820cookie-checkதிமுக வாக்குறுதி என்னாச்சு? காலி பணியிடங்கள் காணா போச்சா? இதுதான் சமூக நீதி ஆட்சியா மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

error: Content is protected !!