Spread the love

மாநாடு 7 June 2023

பள்ளி மாணவர் கை உடைபட்டு மாவுக் கட்டு கட்டிய நிலையில் கலங்கி பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் அது சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்து பரப்பரப்பை ஏற்படுத்தியது.

அதனையொட்டி என்ன நடந்தது? எங்கு நடந்தது ? யார் அந்த மாணவர்? ஏன் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்பதை அறிய முற்பட்டோம் அதில் இதுவரை தெரியவந்திருப்பதாவது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஈஸ்வரன் என்பவர் தான் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் அதில் விடுதிக்காப்பாளர் தண்டபாணி தன்னை இரும்பு கம்பியால் அடித்து விட்டதால் தனது கை முறிந்து மாவு கட்டு போட்டதாக கூறியுள்ளார்.

இதுவரையிலும் விடுதி காப்பாளர் தண்டபாணி மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி மாவட்ட நிர்வாகத்தையும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரையும் கண்டித்து உடனடியாக விடுதி காப்பாளர் தண்டபாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் பொதுச் செயலாளர் பனசை அரங்கன் கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விடுதி காப்பாளர் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவரை கம்பியால் அடித்து கை உடைந்து மாவு கட்டு போடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இவ்வாறு நடந்து கொண்ட விடுதி காப்பாளர் தண்டபாணி மீது இதுவரையிலும் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர் ஆளுங்கட்சி பிரமுகரின் உறவினர் சகோதரர் என்பதாலா மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை . நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு என்ன அச்சம் யாரை திருப்திப்படுத்துவதற்காக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாக நீதிபதியாக இருப்பவரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி ஆளுங்கட்சி பிரமுகரின் உறவினர் சகோதரருக்கு ஒரு நீதி என்று மாவட்ட ஆட்சித் தலைவராகவும் மாவட்ட நிர்வாக நீதிபதியாகவும் இருப்பவர் நடந்து கொள்வது அவரின் பதவிக்கு அழகல்ல

உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விடுதி காப்பாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்து கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் பனசை அரங்கன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை அறிய மாணவரின் முகவரியை கேட்டுள்ளோம். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரேணுகா தேவியை  அலைபேசியில் தொடர்பு கொண்டோம் மீட்டிங்கில் இருப்பதாகவும் முடிந்தவுடன் பேசுவதாகவும் கூறினார் ஆனால் இதுவரையில் பேசவில்லை நாம் இப்போது அலைபேசியில் அழைத்த போது கூட நமது அழைப்பை எடுக்கவில்லை

திமுக ஒரு பக்கம் சமூக நீதி காப்பதாக மேடைகளிலும் திரைப்படங்களிலும் பேசி நடித்து காட்டினாலும் சில திமுகவினர் இவ்வாறு நடக்கலாமா அவர்களுக்கு அரசு அதிகாரிகள் துணை போகலாமா என்கிற கேள்வியை சாமானிய மக்கள் கேட்கின்றார்கள். 

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரேணுகா தேவி நம்மிடம் என்ன விளக்கம் தருகிறார் என்பதையும், இதனையொட்டிய அனைத்து செய்திகளையும் அடுத்து வருகிற அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழில் முழுமையாக வெளியிடுகிறோம் தமிழ்நாடு முழுவதும் கடைகளில் கிடைக்கும் வாங்கி படித்து மற்றவர்களுக்கும் பரிந்துரைகள்.

70760cookie-checkதிமுகவின் சமூக நீதி மாவு கட்டும் மாவட்ட நிர்வாகமும் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!