மாநாடு 24 March 2025
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரை கொலை செய்தது தொடர்பாக கடந்த 05.09.2021 ஆம் தேதி சூரப்பள்ளம் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி என்பவருடைய புகாரின் பேரில் ஜேம்ஸ், மஞ்சுநாதன், பார்த்தா (எ) சதீஸ் மற்றும் காளிராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பட்டுகோட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி ஜேம்ஸ் என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஐந்து மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது பட்டுகோட்டை நீதிமன்றத்தில் பிடிகட்டளை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு தேடப்பட்டு வந்த ஜேம்ஸ் என்பவரை 24.3.2025ம் தேதியான இன்று பட்டுகோட்டை காவல் துறையினர் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி உள்ளார்கள்.