மாநாடு 15 January 2026
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பேரில் போலியாக ஆவணம் தயார் செய்து கடன் பெற்று ஏமாற்றியதை நீதிமன்றத்தின் மூலம் முறையிட்டு போராடி வருகிறார்கள்.

அவர்களின் தொடர் போராட்டம் நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது. அதன்படி இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து போராடிய விவசாயிகள் கைது செய்ய ப்பட்டுள்ளதை கண்டித்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர்.பாண்டியன் கீழ் கண்டவாறு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் ;
அறிக்கை : திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளை பொங்கல் திருநாளில் கைது செய்வதா?
பி ஆர் பாண்டியன் கண்டனம்…

தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்ககுடி திரு ஆருரான் சர்க்கரை ஆலையில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் போலியாக சான்றுகள் கொடுத்து வங்கிகளில் சுமார் ரூ400 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளனர்.
கருப்பு பயிரிட்ட விவசாயிகள் ஆலை நிர்வாகம் தவறான வகையில் கடன் பெற்றதை உறுதி செய்த பின்னரும் விவசாயிகளை கருப்பு பட்டியலில் இணைத்து கடன் வழங்க மறுத்து வருகின்றனர்.இந்த நிலையில் இது குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது.தமிழக அரசு விவசாயிகள் பெயரில் போலியாக பெற்ற கடன் குறித்து மாவட்ட வங்கியாளர்கள்
கூட்டத்தில் உறுதிப்படுத்தி அதற்கான தீர்மானம் நிறைவேற்றி மாநில வங்கியாளர் கூட்டத்திற்கு அனுப்பப்பட்டது. மாநில வங்கியாளர் கூட்டத்திலும் இக்கடனுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.கடன் மோசடி குறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்நிலையில் தொடர்ந்து 1142 வது நாளாக ஆலை வாயிலில் அமர்ந்து விவசாயிகள் அமைதி வழியில் போராடி வருகிறார்கள்.
இன்று ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கிற வகையில் பொங்கல் திருநாளாம் உழவர் திருநாளில் விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் முருகேசன் தலைமையில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறை அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதி கொடுத்த திமுக,
அதற்கான தொடர் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய திமுக விவசாய அணி இன்றைக்கு விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் நிலைக்கு திமுக அரசு முன்வந்துள்ளது.
குறிப்பாக ஆலையில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கான தீர்வு எட்டாமல் தனியார் சர்க்கரை ஆலையை கிரயத்திற்கு வாங்கி மது ஆலை திறந்து உற்பத்தி செய்து வருவதற்கு தமிழக அரசு துணை போகிறது.
இதன் மூலம் திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமான கார்ப்ரேட் ஆட்சியாக செயல்படுவது
வெளிப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். விவசாயிகள் போலியாக பெற்ற ஆரரான் சக்கராலை நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக அரசு பொறுப்பு ஏற்று வழங்க வேண்டும். கைது செய்து இருக்கிற விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். கடன் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த முதலமைச்சர் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். பி.ஆர். பாண்டியன் தலைவர்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு.
