Spread the love

மாநாடு 20 February 2026

மக்கள் பேட்டி வீடியோ : https://youtu.be/Rlrp3f39TkQ

சேதுபாவாசத்திரம் அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தில் அம்பலகாரர் தெரு உள்ளது .இந்த தெருவில் உள்ள சாலை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டு இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை மெயின் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையாகும்.

மேலும்சாலையின் குறுக்கே சுமார் 100 ஏக்கர் பாசன வசதி பெரும் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது அந்த பாலமும் மிகவும் சேதம் அடைந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மரக்கா வலசை ஊராட்சியில் உள்ள சுடுகாடு . காரங்குடா முக்கம்.

துறையூர் உள்ளிட்ட இடங்களில் நன்கு இயங்கி வந்த பத்துக்கு மேற்பட்ட (கைப்பம்பு .மினி டேங்க்) ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மோட்டர்களையும் பைப்புகளையும் அகற்றிவிட்டு புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தருவதாக ஊராட்சி நிர்வாகம் கூறி இருந்தது ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்காமல் ஆழ்குழாய் கிணறு இருந்த இடமே தெரியாமல் சென்று விட்டதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் எனவே அந்த இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் மேலும் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி : பேராவூரணி நீலகண்டன் .

89980cookie-checkசேதுபாவாசத்திரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்.. மக்கள் பேட்டி வீடியோ

Leave a Reply

error: Content is protected !!