Spread the love

மாநாடு 25 February 2026

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்கா பில்லுவெட்டுவிடுதி கிராமத்தில் உள்ள 1000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சரிவர மக்களுக்கு குடிநீர் வருவதில்லை எனவும் சரியாக இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து பில்லுவெட்டுவிடுதி பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள்

பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் ஒரு சில நபர்கள் சுமார் 5க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் மின்மோட்டர் வைத்து குடிநீர் எடுப்பதாக அதிகாரியிடம் புகார் கூறினர்,

இதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மின் மோட்டார்கள் வைத்து குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, பொதுமக்களுக்கு சரிவர தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறினர். அதிகாரிகள் ஆய்வின் போது திருவோணம் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், உள்ளிட்ட போலீசார் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

90120cookie-checkதிருவோணம் அருகே குடிநீர் பிரச்சனை, ஆய்வுக்குப் பின் எச்சரிக்கை..

Leave a Reply

error: Content is protected !!