மாநாடு 2 April 2026
மின்சாரத்துறை அலட்சியப் போக்கால் தொடர் மின்விபத்துக்கள் நடைபெறுகிறது இனியாவது வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ? என்ன நடந்தது இந்நிகழ்வு எங்கு நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விஜயப்புரம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் தேரை பொதுமக்கள் நேற்று மாலை இழுத்து வந்த போது மூங்கில் பாடி சாலையில் உள்ள விஏஓ அலுவலகம் முன்பு மின் கம்பியில் தேர் இடிக்கும் என்பதால் மின்கம்பத்தில் உள்ள மின் கம்பியை அவிழ்க்க சென்ற தற்காலிக ஒப்பந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
மின்கம்பத்தில் ஹச் டி லைன் ஆப் செய்யாமல் ஏறி வேலை செய்த தற்காலிக மின் ஊழியர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்காலிக பணியாளரை எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின்கம்பத்தில் வேலை பார்க்க அனுமதி வழங்கிய மின்சாரத்துறை அதிகாரிகளே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறுகிறார்கள்..
வாக்குவாதம்
மேலும் பாதுகாப்பற்ற முறையில் மின்கமங்களில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர், இவர்களுக்கு அரசு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியும் அதனை அலுவலர்கள் உபயோகப்படுத்த தவறியதால் இதுபோல மின்விபத்து ஏற்படுவதாகவும் அதனை வரைமுறை ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பகுதியில் வேலை செய்யும் மின் ஊழியர்களுக்கு எல் டி லயன் ஹெச்டி லைன் வேலை செய்யும் போது மின்சாரம் இருக்கிறதா இல்லை என்று பார்க்கும் உபகரணங்களை எப்பொழுதும் இவர்கள் வைத்திருக்க வேண்டும் எத்தனை ஊழியர்கள் வைத்திருக்கிறார்கள்?
மின்கம்பத்தில் எல்டி லைனுக்கும் ஹச் டி லைனுக்கும் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் இதனை செய்ய மின்சார வாரிய துறை தவறியதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் அறிய முடிகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் மின் ஊழியர்கள் இறப்பு அதிகரித்து வருகிறது தமிழக மின்சார வாரியம் இதற்கு முழுமையாக நடவடிக்கை எடுத்து மின் ஊழியர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியாவது மின்விபத்துக்கள் நடக்காமல் தடுக்குமா ? அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?
