மாநாடு 16 December 2025
ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சாமானியர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் , அதைவிட அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் மட்டுமே அப்பணிகளுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே பிரதானம் என்று செயல்பட்டு எந்த கடைகளில் , யாரிடம் ரசிது கொடுக்காமல் எவ்வளவு போடலாம் என்று எண்ணுபவர்கள் வேலைக்கு வந்தால் மனிதர்கள் உட்பட அங்கு வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் பெரும் துன்பம் ஏற்படும் என்பதை மெய்ப்பிக்கும் அதிகாரிகளின் வரலாறு பல உண்டு.
தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்த சுகாதார அலுவலர் ஏ.ஜி. ரமேஷ், அவரோடு கூட்டாக இருந்து செயல்பட்ட எபின்.சுரேஷ் சுகாதார ஆய்வாளர், போன்றவர்களின் அதிகார அத்துமீறல் செயல்பாடுகளை அவ்வப்போது மாநாடு வெளிக்கொணர்ந்து வருகிறது. மேலும் பிறப்பு, இறப்பு போலிச் சான்றிதழ்கள் கொடுத்தவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டு வருபவர்களையும் தெள்ளத் தெளிவாக ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடும் மாநாடு.
இவர்களின் வரிசையில் புதிதாக வரும்போதே வேலை கற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்கு மனதார பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் சாக்குப் போக்கு சொல்லி பொதுமக்களை புறக்கணிக்கும் செயலில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாநகராட்சி நாலு கால் மண்டபம் பிரிவில் பணியில் இருக்கும் சுகாதார ஆய்வாளர் பிரசன்னா நேற்று நாயின் உயிரைக் காப்பாற்ற சாக்குப் போக்கு சொல்ல ஆரம்பித்தார். நோய் பரவாமல் தடுக்கும், மக்களை காக்கும் பெரும் பணியில் தாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்து அல்லது அவரின் பணிகளே என்னவென்று தெரியாமல், நோய் பரப்பும் விதத்தில் அவர் பகுதியில் பணிகள் இருக்கிறது என்பதை அவரின் வாய்மொழியிலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவருக்கு பயிற்சி கொடுப்பவரின் தரம் இவர் பார்க்கும் பணியின் தரத்தில் தெரிகிறது அல்லவா.
இந்த ஆடியோ:
ஒரு சுகாதார ஆய்வாளர் அல்லது அலுவலர் அல்லது சுகாதாரப் பிரிவினர் அலட்சியத்தால் அல்லது கவனக்குறைவால் உயிர் ஆபத்தான நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பது சட்டவிரோதம் இதற்கு
BNS –271ன் படி தண்டனை வழங்கலாம்.
BNS –272 ஒரு நோய் பரவும் என்று தெரிந்தே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் வழங்க முடியும் என்கிறது சட்டம்.
மேலும் தன் கடமை நோய் பரவாமல் பொதுமக்களை காப்பது என்று தெரிந்தும் கடமையை செய்யாமல் கடமை தவறியதால் பணி நீக்கம் செய்யலாம் என்கிற நிலையில்
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் என்ன செய்ய போகிறார்கள் என்பதும் இதற்குப் பிறகாவது புதிதாக தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் பணிக்கு சேர்ந்திருக்கும் 8 பணியாளர்களுக்கும் உண்மையிலேயே வேலை தெரிந்த, மக்களின் மீது அக்கறை கொண்ட அலுவலர்களை வைத்து பயிற்சி கொடுப்பார்களா? அதற்கு முயற்சியாவது எடுப்பார்களா ? என்பதை அடுத்தடுத்து மாநாடு வெளியிடும். இப்போதைக்கு இந்த ஆடியோ மட்டும் வெளியிடுகிறோம்.
இன்னும் ஓரிரு நாளில் மொத்தமாக மெத்தனமாக பேசிய செயல்பட்ட அலுவலர்களின் ஆடியோக்களை வெளியிடுகிறோம் இது முழுக்க முழுக்க மக்களின் நலன் காக்க மட்டுமே
என்பது மாநாடு வாசகர்களுக்கு முழுமையாக தெரியும் என்பதை நான் அறிவேன்.
