Spread the love

மாநாடு 11 March 2022

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக மாபெரும் தோல்வியை சந்தித்தது.

காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, 2022ல் நாம் பெருமளவில் வெற்றியைக் குவித்துள்ளோம். எனவே, 2024 மக்களவையிலும் நாம்தான் ஆட்சியமைப்போம் எனத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வரும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இந்த தேர்தலில் , இந்த முறை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு சதவீதம் 20% லிருந்து 37% ஆக அதிகரித்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தோல்வியால் சோர்ந்துவிடாமல், எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் முறைகேடு குறித்து, தடயவியல் சோதனைகளை நாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

24110cookie-checkமம்தா அறிவிப்பு 2024ல் காங்கிரசோடு சேர்ந்து பாஜகவை வீழ்த்துவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!