Spread the love

மாநாடு 16 May 2022

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வந்திருந்தார் அவர் பக்தர்களிடம் கோவிலில் போதுமான வசதிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பக்தர்களின் வரிசையில் நிற்கும்போது வெயில் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டிருப்பதாக துறையினர் முன்னதாக அனைத்து கோயிலிலும் தமிழில் அர்ச்சனை என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது என்றவர் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல என்று கூறினார்கள். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது வெயில்காலம் என்பதால, பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்கும்போது வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்க அறிவுத்தப்பட்டுள்ளது.அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை செயல்படுத்துவது கடினமான காரியமாக இருக்கிறது

இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். அன்னைத்தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல எனவும், விரும்புவோர் செய்யலாம் என்று கூறினார். தமிழ் அர்ச்சனை திட்டம் 47 கோவில்களில் உள்ளது. தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. தற்போது, கபாலீசுவரர் கோயிலில் இரண்டு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் தொடர்ந்து விரிவுப்படுத்தப்படும் என்று கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கும்  அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்: சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான கேள்விக்கு அங்கு அதிகாரிகள் குழு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை எனவும் கொரோனா தொற்றுக்கு பின்பு கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீட்சகர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும்.

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் பெறப்பட்ட புகாரின்மீது இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமானது தொடர்பான கேள்விக்கு: அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

35200cookie-checkதமிழ் அர்ச்சனை கடினமாக இருக்கிறது என்றார் அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!