மாநாடு 22 March 2022
சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், இன்று பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்று கூறுவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை எவ்வாறு நடத்துவது, சாதாரண கட்டண நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அனைத்து பேருந்திலும் பயணிக்க அனுமதிக்கமுடியாது என தெரிவித்தார்