மாநாடு 30 May 2022
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தர்ணா போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது அதன்படி கடந்த 28ம் தேதி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு சிவ.ரவிச்சந்திரன் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார், எஸ்.ஹேமலதா மாநில செயலாளர் இப்போராட்டத்தில் நிறைவுரை ஆற்றினார். அதில் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.
அதில் முதன்மையான கோரிக்கையாக திமுகவின் தலைவர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அனைவரும் வலியுறுத்தினார்கள். குறிப்பாக திமுக வெல்வதற்கு அரசு ஊழியர்கள் ஆகிய நாங்கள் தான் காரணம்.அதை முதன்மை அமைச்சர் 33 மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்தது அரசு ஊழியர்கள் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். நிலை அப்படி இருக்க அனைத்தையும் மறந்துவிட்டு தற்போது நிதித்துறை அமைச்சர் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பில்லை என்று பேசுகிறார்.
உழைக்கும் ஊழியர்கள் எங்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை என்று சொல்லி சாக்கு போக்கு காட்டிவிட்டு தனது தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதிலும் மக்கள் பணத்தை எடுத்து சிலை வைப்பதிலூம் முதல்வர் மும்முரம் காட்டுகிறார் இது நல்லதல்ல யாருக்கும் தெரியாத புரியாத திராவிட மாடல் என்று சொல்லி அனைத்து பிரச்சனைகளையும் மடை மாற்ற பார்க்கிறார் .இதுவெல்லாம் அரசு ஊழியர்களாகிய எங்களுக்கு தெரியாமல் அல்ல, என்பதை முதலில் ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும்.. முன்னொரு சமயத்தில் குஜராத் மாடல் என்று சொல்லி ஊடகங்களால் அனைவரையும் நம்ப வைக்கப்பட்டது தற்போது அதே வேலையை தான் தமிழக முதல்வர் திராவிட மாடல் என்கிற பெயரில் செய்கிறார்.
மோடியும் 3000 கோடி ரூபாய்க்கு சிலை வைக்கிறார் இங்கு ஸ்டாலினும் அதை வேலையை தான் செய்கிறார் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் தற்போதைய வெற்றியின் வாக்கு விழுக்காடு ஒன்றும் பெரிதல்ல என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம், அரசு ஊழியர்கள் எடுத்த அனைத்துப் போராட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எங்களை அடுத்தகட்ட போராட்டத்திற்கு அரசு தள்ளாமல் உடனடியாக எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் .
தற்போது இந்த அரசின் போக்கு நம்ப வைத்து முதுகில் குத்துவது போல் இருக்கின்றது இது சரியான நடைமுறை அல்ல என்று பேசினார்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முக்கிய பெரும்பான்மையான சங்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து அதன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள் .கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் தான் திமுகவின் வெற்றியை ஒவ்வொரு முறையும் தீர்மானித்திருக்கிறார்கள். தற்போது அவர்களின் அதிருப்தியையும் ஓராண்டிற்குள் திமுக அரசு சம்பாதித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ லிங்க் இதோ :https://youtu.be/TESJq9istCg