மோடியின் புதிய முயற்சி
இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் தளத்தை மொத்தமாகப் புரட்டிப்போட்ட இந்திய அரசின் UPI சேவையானது தற்போது வெளிநாட்டிலும் பயன்படுத்த முடிவு எடுத்து அதற்கான பணிகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
யூபிஐ, சேவை தளமானது இன்னும் இந்தியாவின் கிராம பகுதிகளில் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் தான் உள்ளது.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் NPCI அமைப்பு யூபிஐ லைட் என்னும் புதிய சேவை தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் ஆர்பிஐ-யின் புதிய சேவை..!
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கான கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை வெளியிட்ட சில வாரத்தில் NPCI யூபிஐ லைட் என்ற புதிய ஆப்லைன் பேமெண்ட் சேவை தளத்தைச் சோதனை செய்யத் துவங்கியுள்ளது.
யூபிஐ லைட் தளம்
இந்தப் புதிய சேவை மூலம் BHIM, கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யூபிஐ செயலிகளைப் போலவே இந்த யூபிஐ லைட் தளம் இண்டர்நெட் இல்லாமல் இயங்க கூடியவை என்பது தான் இப்புதிய தளத்தின் சிறப்பு.
ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இப்புதிய ஆப்லைன் பேமெண்ட் ப்ரேம்வொர்க் படி NPCI உருவாக்கப்பட்டு உள்ள யூபிஐ லைட் தளத்தில் அதிகப்படியாக ஒரு பேமெண்ட்-க்கு 200 ரூபாயும், மொத்தமாக 2000 ரூபாய் வரையில் பேமெண்ட் செய்ய முடியும். இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு எவ்விதமான இண்டர்நெட் மற்றும் டெலிகாம் இணைப்பும் தேவையில்லை.
*ஒடிபி தேவையில்லை*
இந்த ஆப்லைன் பேமெண்ட் சேவைக்கு additional factor of authentication (AFA) தேவையில்லைஆகவே ஒடிபி போன்ற எதுவும் தேவையில்லை.
*ஆப்லைன் பேமெண்ட் முறை*
இத்தகையை ஆப்லைன் பேமெண்ட் முறை இண்டர்நெட் இல்லாத, டெலிகாம் சேவை தரம் குறைவாக உள்ள அனைத்து இந்திய கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை கொண்டு செல்ல சிறப்பான கருவியாக உள்ளது.
*உலக வங்கி அறிவிப்பு*
உலக வங்கி தரவுகள் படி இந்தியாவில் இன்னும் 59 சதவீத மக்களுக்கு இண்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை, 17 சதவீத மக்களுக்குச் செல்போன் இணைப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 2021ல் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் இன்னும் 25,000 கிராமங்கள் மொபைல் மற்றும் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் உள்ளது என்று அறிவித்துள்ளது.
ஒடிஷா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருக்கும் அதிகப்படியான கிராமங்களில் இன்னும் இண்டர்நெட் மற்றும் டெலிகாம் சேவைகள் இல்லாமல் இருக்கும் இந்த வேளையில் ஆப்லைன் பேமெண்ட் சேவை அளிக்கும் யூபிஐ லைட் போன்ற புதிய தளம் இந்தியாவின் பேமெண்ட் சந்தையின் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது.