மாநாடு 20 December 2022
வெற்றி பெறுவது
எளிதானது அல்ல.
வாழ தெரிந்தவன் மனிதன்
வாழ வைப்பது இறைவன்
ஒவ்வொரு பிறவியையும் இந்த பூமி, வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் அதில் சிலர் மட்டும்
எரி நட்சத்திரம் போல், பிரகாசிக்கிறார்கள்.
காரணம் என்ன
வாழ்க்கையில், இன்னும்
நான் வெற்றி பெறவில்லை
என்றாலும், வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை
கூர்ந்து கவனித்து இருக்கிறேன். ஆன்மீகவாதி முதல், ஐகோர்ட் ஜட்ஜ் வரை .
வெற்றி பெற்ற
இவர்கள் அனைவருமே
தினம்
தோறும் கற்று கொண்டு வருகிறார்கள் என்பது தான்
ரகசியம்.
மேலும்,
அனைத்தையும் இவர்கள்
முழுமையாக
கவனித்து வருகின்றனர்,
ஒரு வட்டத்தில் தங்களை
முடித்து கொள்ள வேண்டும்
என்று நினைக்காது, யோசைனையை தீட்டி கொண்டே இருக்கிறார்கள்.
அத்துடன், தங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறார்கள்.
குறிப்பாக, புல்ஸ்டாப் இல்லாது
கமா மட்டுமே இருக்கிறது இவர்களது வாழ்க்கையில்,
அதே போல, அப்சர்வேஷன்,
சப்ஜெக்டில் மாஸ்டராகவும்,
வயதானாலும், எல்லா கட்டங்களையும் அறிய வேண்டும் என்ற ஆவல், சமூக அறிவு, தினம்தோறும் தன்னை,அப்டேட் செய்து கொள்வது, என்பதே இவர்களின் வெற்றியின் ரகசியமாக இருந்து வருகிறது.
விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால்
அதிஷ்டம் தானாக வந்து சேரும்
என்பதையே வெளிபடுத்துகிறது
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை.
– சக்தி.சாமிநாதன்