மாநாடு 9 July 2022
மதுரை அலங்காநல்லூர் அடுத்துள்ள காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 67 வயதுடைய பாண்டி, இவரின் மனைவி காந்திமதி 62 வயதுடையவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி இறந்து விட்டதால் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தார்.இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தனியாக வீட்டில் காந்திமதி வாழ்ந்து வந்தார்,
இந்நிலையில் நேற்று காந்திமதியின் வீட்டிற்கு அவரது உறவினர் வந்திருக்கிறார் வீட்டில் நுழைந்தவுடன் கண்ணில் கண்ட காட்சி அவரை கதி கலங்க வைத்திருக்கிறது, காந்திமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறார் .இதனை கண்டவுடன் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைந்து வந்த காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர் ,
வழக்கு பதிவு செய்து மர்மமான முறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது எப்படி என்று தீவிர விசாரணையில் இறங்கியது காவல்துறை , அதன் பேரில் கொலை செய்யப்பட்டு கிடந்த காந்திமதியின் வீட்டின் அருகில் இருந்த முத்துராஜா என்ற இளைஞர் மீதும் ஓரு சிறுவன் மீதும் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் இவர்கள் தான் கொலையாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் மது போதைக்கும் ,கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்றும் இவர்கள் போதையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக மூதாட்டியிடம் இருக்கும் தங்க நகைகளை அபகரிக்க திட்டம் தீட்டி மூதாட்டி காந்திமதியின் வீட்டை நோட்டமிட்டு இருக்கின்றனர்,
அதன்படி நேற்று முன்தினம் போதையில் இருந்த இருவரும் காந்தி மதியின் வீட்டினுள் சென்று காந்திமதியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
போதைக்காக மூதாட்டியை படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்பெல்லாம் எங்கோ, எப்போதோ நடந்த நிகழ்வுகள் தற்போது தினந்தோறும் வாடிக்கையாக நடந்து வருவதை அரசே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும், போதைப் பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு தடுத்திட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.