மாநாடு 27 July 2022
சென்னை பூவிருந்தமல்லியை அடுத்த புளியம்பேடு பகுதியில் இளைஞர் ஒருவர் கேபிள் ஒயரை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து வந்திருக்கிறார்.அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி இருக்கின்றார்கள். தப்பியோட முயன்ற அவரை துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டி படுகொலை செய்து இருக்கின்றனர்.சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலைசெய்யபட்டவரின் முகம் முழுவதும் சிதைந்து போய் உள்ளதால் கொலை செய்யப்பட்டவர் குறித்த தகவல்களை கண்டறிய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.