Spread the love

மாநாடு 21 March 2022

தமிழ்நாட்டில் இதுவரை தேர்தலுக்கு முன்பாக பல கட்சிகளில் இருந்தும் பல்வேறு இடங்களிலிருந்தும் வேறு ஒரு கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் அதற்கு மாறாக தேர்தல் முடிந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களும். மாமன்ற உறுப்பினர்களும், மாற்றுக் கட்சியில் இருந்தவர்களும், தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் அதிக அளவில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி நேற்று 20.3.2022 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக பெண் எனும் பேராற்றல் என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்திய மாபெரும் அரசியல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் 12வது வார்டில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதேபோல நேற்று நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் தென் மண்டல செயலாளர் பொறியாளர் வெற்றி தலைமையில் நடைபெற்றது அதில் மக்கள் நீதி மய்யம் தேனி மாவட்ட இணைச்செயலாளராக பயணித்த சுரேஷ் குமார் அவர்கள் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இதேபோல பல்வேறு ஊர்களிலும் தினந்தோறும் நாம் தமிழர் கட்சியை விரும்பித் தேடி ஓடிவந்து தங்களை நாம் தமிழர் கட்சியில் ஏராளமானோர் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை அரவணைத்து அரசியல் படுத்தி வழிநடத்தினால் மட்டுமே வரும் காலங்களில் மிகப்பெரிய சக்தியாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

26080cookie-checkமாமன்ற உறுப்பினர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை நாம் தமிழர் கட்சியில் இணைகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!