மாநாடு 17 February 2022
இன்னும் இரண்டே நாளில் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இன்று இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக இருக்கின்றார்கள் .
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றது.அதில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சவால்கள் நிறைய நிரம்பி உள்ளன.
ஏனென்றால் ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை அதுவும் ஒரு காரணம்.
உலகில் தலைசிறந்த பத்திரிகை ஒன்று இந்தியாவிலேயே சிறந்த நகரம் எது என்று எடுத்த ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் தான் சிறந்த நகரம் இந்தியாவிலேயே என்று கூறியிருக்கிறது.
அப்படிப்பட்ட தஞ்சாவூரில் நடப்பதற்கு நல்ல சாலை இல்லை .
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை.
கழிவு நீர் வடிகால்கள் கூட சரியானதாக இல்லை.
மின் விளக்கு சரியாக இல்லை இப்படி இல்லை இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய இருக்கிறது தஞ்சாவூரில்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக சமூக ஆர்வலர்கள் சொல்வது என்னவென்றால் நல்லவரோ கெட்டவரோ நமது தெருவை சேர்ந்தவர்கள் நமக்கான பணிகளை செய்தால் நாம் போய் உரிமையோடு கேட்க முடியும்.
அந்த காரணத்திற்காக தான் பஞ்சாயத்து தேர்தல் ,
நகராட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல் என்று திட்டமிட்டு மக்கள் பணியாளர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் வகையில் வைத்திருக்கிறோம்.
இது கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டதால் அனைத்து பணிகளும் முடங்கிப்போயுள்ளதாக கூறுகிறார்கள்.
இதன்படி பார்க்கும்போது அத்தனை பொறுப்பும் கடமையும் அரசு அதிகாரிகளிடம் இருந்தும் அவர்கள் சரிவர செயல்பட வில்லை என்பதையே இந்த தரங்கெட்ட சாலைகளும், வழிந்தோடும் சாக்கடைகளும், நமக்கு காட்டுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் இப்போது நடைபெற இருக்கிற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இதனடிப்படையில் தஞ்சாவூர் பகுதியில் நாற்பத்தி எட்டாவது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி மல்லிகா அவர்களை நேர்காணல் செய்தோம்.
இந்த வேட்பாளரை பற்றியும் அவரிடம் எடுத்த நேர்காணலை பற்றியும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடவும்.
Link :https://youtu.be/VnxHAVOaceg