Spread the love

5ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் -முதல்வர் அறிவிப்பு

நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5ந்தேதி நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிள்ளார்.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக பிப்ரவரி 1ந்தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில், நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத்தெளிவாக விளக்குவதோடு இந்தச்சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும்.

இது குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட வருகிற 5ந்தேதி அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14500cookie-checkஅவசரமாக அனைத்துக்கட்சி கூட்டம் கூடுகிறது முதல்வர் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!