Spread the love

சீமான் கேட்டதை செய்தார் முதல்வர்

தமிழக சட்டப்பேரவையில் ஏற்றப்பட்ட நீட் விலக்கு முன்வடிவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாக கலந்துபேசி அடுத்த கட்ட நகர்வை எடுப்பதற்காக தமிழகத்தின் சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் அதன்படி இன்று அதாவது 5-2-2022 முதல்வரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.

நீட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல் மக்கள் மன்றத்தில் அதிகமாக கொண்டுசென்ற கட்சிகளும் கட்சிகளின் தலைமையும் பல இயக்கங்களும் உள்ளன.அதில் முக்கிய கட்சியாக இருப்பது சீமான் அவர்களின் நாம்தமிழர்கட்சி ஆகும்.. இவர்களை கருத்துக்கூற தமிழக அரசு அழைக்க வில்லை என்றாலும் கூட தனது கட்சியின் நிலைப்பாட்டை 3-2-2022 அன்று அறிக்கையின் வாயிலாக அரசுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார் சீமான். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் அவர்களும்,வழக்கறிஞர் தமிழ்மணி அவர்களும் கூட இன்னும் சிலரும் இதே கருத்தை தான் தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து.

வருகின்ற பிப்.8 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு,தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற டெல்லி சென்று போராட வேண்டும் என அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்ப அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக அழைப்பு விடுத்திருந்த அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதனைத் தொடர்ந்து,முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றது.

இந்நிலையில்,அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில்,நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற பிப்ரவரி 8ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதா ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் புரிந்துள்ள நிலையில்,ஆளுநருக்கும்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் புரியாமல் போனது விந்தையாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

15330cookie-checkசீமான் கேட்டதை செய்தார் ஸ்டாலின்
One thought on “சீமான் கேட்டதை செய்தார் ஸ்டாலின்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!