மாநாடு 7 October 2022
தனியார் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மரணம் அடைந்த சம்பவம் எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது,
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் இயங்கி வந்த விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை கொண்ட 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது, மூன்று சிறுவர்கள் பரிதாபமாக இறந்திருக்கிறார்கள்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் சமூகநல பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதியும் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்கள் அதன்பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனியார் காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது, இங்கு இரவு நேரங்களில் காப்பாளர்கள் இல்லை, இந்த காப்பகத்தின் நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்களின் அஜாக்கிரதையாளும், மெத்தனத்தாலும், 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்துள்ளார்கள் .இந்த தனியார் காப்பகத்தை மூடி சீல் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது.இந்த காப்பகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்படுவார்கள் என்றார்.