மாநாடு 12 February 2022
தஞ்சையில் கீழவாசல் அருகே மகர்நோன்பு சாவடி பகுதியில் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகின்றனர்.முகமது யாசின், அப்துல் காதர்,அகமது ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் வக்போர்டு இடங்களை நிர்வகித்து வருவதாகவும் ஏறக்குறைய 150 வீடுகள் குறைந்த வாடகைக்கு இவர்கள் விட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது.
மேலும் ஏறக்குறைய 6 மாதங்களுக்கு முன்பாக மண்ணை பாவா என்பவரை கைது செய்து புழல் சிறையிலடைத்து இருப்பதாகவும்,அவர் கொடுத்த தகவலின் பெயரில்தான் இந்த சோதனை நடைபெற்றதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.அவர் ஏற்கனவே கிலாஃபத் அமைப்பில் இருந்தவராம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பியதாகவும், காதர்,அகமது, முகமது யாசின் இவர்கள் கிளாபத் அமைப்போடு தொடர்பில் இருந்ததாகவும் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு என்ற தகவலின் பெயரில் ஏறக்குறைய ஐந்து மணி நேரம் இவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது.இது தவிர மேலும் பலரது வீடுகளில் சோதனை தொடரும் என்று தெரியவருகிறது. இந்த சோதனையின்போது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அந்த பகுதி மக்கள் அங்கு கூடியதால் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் சில ஆவணங்களை மட்டும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது யாரையும் கைது செய்து அழைத்துச் செல்லவில்லை என்பது தெரியவருகிறது.