மாநாடு 31 October 2022
நாளை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கின்ற நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கின்ற நவம்பர் 01 தமிழ்நாடு நாள் விழாவிற்கு தன்மான தமிழரெல்லாம் தலைநகரில் கூடுவோம் என்கின்ற பேரலைப்பை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்திருந்தார் .
நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள் அந்த நாளில் தான் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது அருகில் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் இந்த நாளை தான் மாநிலத்தின் பிறந்த நாளாக முன்னெடுக்கப்படுகிறது , தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு நாள் நவம்பர் 1 என்பதை அறிவித்தது, இதற்காக பல அமைப்புகளும், நாங்களும் பல்வேறு விதங்களில், போராடி கோரிக்கையை வைத்ததன் காரணமாக நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்ட அந்த நாளை திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஜூலை 18 தமிழ்நாடு நாள் என்று தன்னிச்சையாக அறிவித்தது, இந்த செயல் தமிழ்நாடு நாள் எது என்கின்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ,இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு சரியாக வழிகாட்ட வேண்டிய அரசு ஜூலை 18 என்று ஏன் கூறுகிறது என்று கேட்டால் ஜூலை 18ஆம் தேதி தான் சட்டப்படி தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்டது என்கிறார்கள் .அறிவில் சிறந்த ஆன்றோர்களும் , சிந்திக்கும் திறனுடைய சாமானிய மக்களும், சிந்தித்துப் பார்க்க வேண்டும், பிறந்த நாளை கொண்டாட வேண்டுமா ?பெயர் வைத்த நாளை கொண்டாட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி ஏற்கனவே தெளிவு படுத்திய சீமான் .
இந்த ஆண்டு நவம்பர் 1 தமிழ்நாடு நாளை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முன்னெடுப்பதற்காக உலகெங்கிலும் உள்ள, உணர்வுள்ள தமிழர்களை அழைத்திருந்தார், அவரின் அழைப்பை ஏற்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல பகுதிகளில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வர ஆயத்தமாகி உள்ளார்கள் என்று தெரிய வருகிறது.
தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் நவம்பர் 1 தமிழ்நாடு நாளில் பெருந்திரளாக பங்கேற்பதென முடிவெடுத்திருக்கிறார்கள்
நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் நவம்பர் 1 தமிழ்நாடு நாள், இந்தி திணிப்பு எதிர்ப்பு நாளுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பெண்களுக்கும் ,குழந்தைகளுக்கும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த எண்களையும்
வெளியிட்ட சீமான் மேலும் கூறுகையில் நாளை நடைபெற உள்ள விழாவிற்கு வருகை தரும் அனைவரும் காண பேராவலோடு இருப்பதாகவும் அதே நேரத்தில் இந்த விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என் உறவுகள் ஆகிய நீங்கள் எனவே மழைக்காலமாக இருப்பதால் வருகை தரும் அனைவரும் மாற்று உடைகள் எடுத்து வரும்படியும் ஆர்ப்பரித்து வருவதோடு, ஆயுத்தமாகவும் வர வேண்டும் என்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
சீமானின் அழைப்பை ஏற்று அயல் நாட்டில் இருந்தும் ,தமிழ்நாட்டில் இருந்தும் இப்போதே பல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு தமிழர்கள் படையெடுக்க தொடங்கி விட்டார்கள் என்று தெரிய வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இருந்து 10 பேருந்துகளிலும், மகிழுந்துக்களிலும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.