மாநாடு 10 February 2024
நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று மாலை வலங்கைமானில் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்க கோரியும், வலங்கைமான் பகுதியை ஒரு முழுமையான சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க கோரியும்,
வலங்கைமான் தாலுகாவை கும்பகோணம் மாவட்டத்தோடு இணைக்க கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வலங்கைமான் கலையரசன் தலைமை ஏற்றார். வலங்கைமான் பகுதி பொறுப்பாளர் வினோத் வரவேற்புரை ஆற்றினார்.
கும்பகோணம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், மாவட்ட பொருளாளர் அருண், கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர் சுந்தர்ராஜன், சேக் முகமது, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை இந்த ஆர்ப்பாட்டத்தை வலங்கைமான் பகுதி நாம் தமிழர் கட்சியினர் எழுச்சியாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் மணி செந்தில் மற்றும் மன்னை நகரத்து மனிதநேய மருத்துவர் பாரதி செல்வன் இருவரும் ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரை ஆற்றினார்கள்.
வலங்கைமான் பகுதியில் இந்த கோரிக்கையை முன்வைத்து முதன் முதலாக நாம் தமிழர் கட்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது. 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணத்தை விடுத்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாரூருக்கு எல்லா பணிகளுக்கும் செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ள வலங்கைமான் பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி முன் வைக்கின்ற இந்த கோரிக்கைகள் மிக முக்கியமானது என்றும் மக்கள் நலன் சார்ந்தவை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.