மாநாடு 10 November 2022
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் வயது வித்தியாசமின்றி ஏழை ,பணக்காரர் வேறுபாடு இன்றி பலரின் மானத்தையும், பணத்தையும், உயிரையும் பறித்தது, இதனால் பல குடும்பங்கள் சீரழிந்தது,இவ் விளையாட்டில் பொருளாதாரத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் இவ்வாறு தீங்கிழைக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளும் ,கட்சிகளும் , கோரிக்கைகளும் வைத்து போராடவும் செய்தார்கள், அதன் விளைவாக கடந்த அக்டோபர் மாதம் தடை விதிக்கப்பட்டது, அதற்கு முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத் தீர்மானத்தை ஒரு மனதாக சட்டமன்றத்தில் இயற்றி அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபின் தடை செயல்பாட்டிற்கு வந்தது,
இந்நிலையில் தடை செய்யப்பட்டதை எதிர்த்து பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, மேலும் மும்பை அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது, அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது ,அப்போது ஏற்கனவே பல வழக்குகள் இதன் மீது இருக்கின்ற காரணத்தினால் பல வழக்குகளையும் சேர்த்து வரும் 16ஆம் தேதி இவ் வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
ஆன்லைன் விளையாட்டை சூதாட்டம் என்று கூறி தடை விதிக்க கூடாது என்று இவ்வழக்கை கொடுத்த மும்பை அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு தொடுத்திருந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது : ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுக்கள் விளையாட்டை தொடங்கும் முன்பு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது, அதன் பிறகு விளையாட்டு தொடங்குகிறது , எனவே இந்த விளையாட்டுக்களை சூதாட்டம் என கருதக்கூடாது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதைப் பற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது : அரசே டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களில் மது, நாட்டுக்கு ,வீட்டுக்கு ,உயிருக்கு கேடு. என்று எழுதி வைத்து விற்கிறது . இதே போல புகையிலை புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும் என்ற வாக்கியத்தையும், கருகிய இருதய படத்தையும் சிகரெட் பாக்கெட்டுகளில் போட்டு விற்பனைக்கு வருகிறது அதனையும் அரசு அனுமதிக்கிறது. இதனை நடைமுறையில் அனைவரும் பார்த்து வருகிறோம். ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டும் எச்சரிக்கை வாக்கியத்தோடு நடைமுறைக்கு வந்து பல குடும்பங்களை நடுத்தெருவிற்கு தள்ளாமல் இருக்க வேண்டும் அதற்கு மேன்மை மிகு நீதி அரசர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.