மாநாடு 30 மார்ச் 2023
இன்று நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வந்த பத்து தல திரைப்படம் அனைத்து பகுதிகளிலும் வெளியாகி ரசிகர்களின் யோகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த படம் கன்னடத்தில் முப்டி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் சில மக்களை மட்டும் தங்களுக்கான டிக்கெட் வைத்திருந்த போதும் அனுமதிக்காமல் வெளியே போங்கள் என்று சாதி தீண்டாமையை கடைப்பிடித்து இருக்கிறார் திரையரங்கில் பணிபுரிபவர்.
அந்த வீடியோ பல ஊடகங்களிலும் வெளியாகி இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளாக திராவிட அரசுகள் இந்த மண்ணை ஆண்ட போதும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசு ஆட்சி செய்யும் போது எவ்வித சாதி தீண்டாமையும் இருக்காது அப்படி இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவ்வப்போது அறிவுறுத்தி வந்த போதும் இன்று நடைபெற்று இருக்கும் இந்த செயல் நாம் வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் தான் வாழ்கிறோமா என்கின்ற ஐயத்தை சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டியை பார்த்தாள் அவ்வளவு பரிதாபமாக இருக்கிறது.
Thanks to sun news
அந்தத் திரையரங்கத்தின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்நிகழ்வு வெளியான பிறகு அவர்களை திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கம் அனுமதித்ததாக தெரிகிறது. இருப்பினும் இனி எப்போதும் எங்குமே இதுபோல நிலை ஏற்படாமல் இருக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை அந்த திரையரங்கத்தின் மீது எடுக்க வேண்டும் என்பதே சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரின் எதிர்பார்ப்பு.
கடுமையான நடவடிக்கை எடுக்கிறதா? கண்டும் காணாமலும் இருக்கிறதா அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.