பேரறிவாளனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் உரிய சில விதிகளை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே மாதம் 28ஆம் தேதி, அவர் புழல் சிறையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்தபடியே உடல்நல பாதிப்புகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததற்கிடையே, அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சை பெற வேண்டி பேரறிவாளனின் பரோல் காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் பேரறிவாளனின் பரோல் காலம் ஜனவரி 24ஆம் தேதியுடன் (நாளை) முடிவடையவுள்ள நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்படுகிறது