மாநாடு 23 May 2022
விழுப்புரம் மாவட்டம் அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 16வயது மாணவி 8 மாதம் கர்ப்பம் மாணவியின் தாயார் செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் இரண்டு இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையில் ஒரு இளைஞரின் வயது 26 என்றும் இன்னொரு இளைஞரின் வயது 27 என்றும் தெரியவருகிறது இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாம். இவர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது .அதன் காரணமாக மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது அதனையடுத்து 16 வயது மாணவியை மீட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் சேர்த்துள்ளனர் மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் ,கல்லூரிகளில், மாணவிகளுக்கு விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
பெண்கள் தங்களுக்கு எதிரான பிரச்சனைகள் இருப்பின் இந்த எண்ணில் 87930 88814 அழைத்து புகார் செய்யலாம்.