Spread the love

மாநாடு 21 February 2022

பொதுவாகவே காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது ஏனென்றால் கடந்த சனிக்கிழமை கூட தேர்தல் பணியின் போது தஞ்சாவூரில் இருந்த காவலர்கள் கூட அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் விடியவிடிய ஒரு கோவில் நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக சென்று இருந்த காவலரை நாம் சந்திக்க நேர்ந்தது.

எப்படி என்றால் நான் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றபோது அங்கு மிகவும் சோர்ந்த நிலையில் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார் ஒரு காவலர் பரிதாபமாக இருந்த அவரை பார்த்து பேச்சுக்கொடுத்த போது இந்த தகவல் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து இந்த செய்தியை கேள்விப்பட்ட போது மிகவும் பரிதாபமாக இருந்தது.

ஈரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). ஈரோடு அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் தேர்தல் பணி சம்பந்தமாக சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினார். இதற்காக அவர் காஞ்சிக்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார்.பெருந்துறையை அடுத்த சின்னியம்பாளையம் அருகே சென்றபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இந்த விபத்தில் அவருடைய தலை சாலையோரத்தில் இருந்த கல் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.

விபத்து நள்ளிரவில் நடந்ததால் யாரும் அதை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், விபத்து குறித்து காஞ்சிக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் மசூதாபேகம், காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

19450cookie-checkதேர்தல் பணியில் இருந்த காவலர் நள்ளிரவில் மரணம் பரிதாபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!