மாநாடு 15 April 2022
கள்ளச்சாராய வியாபாரத்துக்கு துணை போன காவலர்களை டிஐஜி பொறி வைத்து பிடித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறையையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறையினரும் துணை போவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இதுதொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டபோது சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதா கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போனதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பெண் காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அதேப்போல் கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறையினர் யாராவது உடந்தை என்று இனியும் தகவல் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி கயல்விழி எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 9 பெண் போலீசார் உட்பட 16 பேர் பணியில் இருந்த நிலையில் சாராய விற்பனை தொடர்பான புகாரில் ஆய்வாளர் கவிதா பணிநக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
