மாநாடு 18 April 2022
தஞ்சாவூரின் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் முக்கிய பகுதியான பர்மா பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் இருக்கிறது. இந்த பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் காரணம் என்னவென்றால் இந்தப் பகுதியை சுற்றி மருத்துவமனைகள், திரையரங்குகள், காவல் நிலையங்கள், சுற்றிலும் குடியிருப்புகள் ,தெருக்கள் இருக்கிறது. திரையரங்குகள் காட்சி பார்த்துவிட்டு வருபவர்களும் மருத்துவமனையில் நோயாளிகளை வைத்திருப்பவர்களும் இந்த பகுதியில் இரவு நேரங்களில் கூட நடமாடுவதை காணமுடியும்.
இவ்வாறு முக்கியமான பகுதியில் தொடர்ந்து கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களையும் செல்போன்களையும் திருடர்கள் திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் ஒரு முறை கூட திருடர்களை கண்டுபிடித்ததாக தெரியவில்லை என்கிறார்கள். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூபிடர் திரையரங்கம் அருகில் இருந்த செல்போன் கடையில் இரவில் நுழைந்த திருடர்கள் செல்போன்,லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றார்கள் அது புகார் அளிக்கப்பட்டது ,கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை ஆய்வு செய்தார்கள் ஆனால் திருட்டை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த கடைக்கு அருகிலேயே காவலர்கள் கண்காணிப்பு அறையும், சாலையை கண்காணிக்கும் கண்காணிப்பு கேமராவும் இருந்ததும் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாமல் பழுதாக இருந்தது என்பதும் குறிப்பிடதக்கது.

அதற்கு முன்பும், பின்பும் பலமுறை பர்மா பஜார் பகுதியில் திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த 16ம் தேதி அதிகாலை

மோஷிகா மொபைல்ஸ் என்கிற கடையில் கடையில் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து கடையில் மாலை நேரங்களில் வெயில் உள்ளே வராமல் இருக்க கட்டுவதற்காக வைத்திருந்த போர்வையை விரித்து கடையில் இருந்த ஐபோன் ,விவோ ,ஒப்போ உள்ளிட்ட 35 செல்போன்களையும் திருடி எதிரே உள்ள சந்தில் நுழைந்து

ஆட்கள் குடி இல்லாத ஒரு ஓட்டு வீட்டில் போர்வையை விரித்து அதில் இருந்த செல்போன்களில் பழைய மாடலான ஆறு செல் போன்களை மட்டும் அங்கேயே

போட்டுவிட்டதாகவும் கடையை உடைக்க பயன்படுத்திய இரும்புக் கம்பியும் அங்கேயே கடந்ததாகவும் கடையின் உரிமையாளர் செல்வபாரதி நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் திருடன் இவர் கடையோடு சேர்த்து மூன்று கடைகளில் திருட முயற்சித்ததாகவும் அதன்படியே இவர்களின் எதிர்ப்புறம்

உள்ள கிளை மொபைல் அந்த வழியாக வந்த திருடன் முதலில் 130 மணி அளவில் மதினா மொபைல் கடையின் பூட்டை உடைக்க முயற்சித்ததாகவும் அது தோல்வியுற வே அடுத்ததாக 1.47 மணி அளவில் கிளை மொபைல் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் அங்கிருந்த எதையும் எடுக்கவில்லை என்பதும் அதனை தொடர்ந்து மோஷிகா மொபைல் கடையின் பூட்டை உடைத்து மேற்கூறியவாறு

அங்கிருந்த மொபைல்களை திருடிச் சென்றுள்ளதாக கடையின் உரிமையாளர் கூறுகிறார். அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் காலையில் தங்களது கடைகளை சிறக்க வந்தபோது இந்த கடையை ஏற்கனவே திறக்கப்பட்டு பூட்டு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தகவலை கடை உரிமையாளருக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள் இவர் அன்று வெளியூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்ததாகவும் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் உடனடியாக அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு கடையின் பூட்டு உடைந்து இருப்பது குறித்து கூறியிருக்கிறார் தகவல் கேட்டுக்கொண்ட காவல்துறையினர் 9 மணியளவில் கைரேகை நிபுணர்களை கடைக்கு அனுப்பி கைரேகை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
கடையின் உரிமையாளரான செல்வபாரதி அன்று மதியமே வெளியூரிலிருந்து வந்திருக்கிறார். உடனடியாக இவர் கடையின் எதிரில் உள்ள கடையின் கேமராவை சோதித்து பார்த்திருக்கிறார் அதில் திருடனின் நடவடிக்கைகள் வந்த நேரம் அனைத்தும் பதிவாகி இருந்திருக்கிறது. அந்த பதிவுகளை தனது பென்டிரைவில் பதிவு செய்துகொண்டு திருடன் பயன்படுத்திய இரும்புக்கம்பியையும், திருடன் திருடி எடுத்துச் சென்ற செல்போன்களை ஒரு ஓட்டு வீட்டில் வைத்து சோதித்த அடிக்கிச் சென்ற வீட்டையும் பதிவு செய்துகொண்டு அன்று 8 மணி அளவில் புகாரை தயார் செய்துகொண்டு எழுத்து மூலமாக நேரடியாக புகார் கொடுக்க கீழவாசலில் உள்ள கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார் அப்போது பணியில் இருந்த காவலர் தேவாவிடம் இந்த புகாரை கொடுத்திருக்கிறார் புகாரை பெற்றுக் கொண்டவர் மறுநாள் 17ஆம் தேதி காலை வருமாறு கூறி வரும்போது செல்போன்களின் ஐஎம்இஐ நம்பரையும் எழுதி கொண்டு வருமாறும் கூறி அனுப்பி இருக்கிறார்.

அதன்படி நேற்று 17ஆம் தேதி மூன்று முறை காவல் நிலையத்திற்கு சென்றதாகவும் ஆனால் காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக் கொண்ட காவலர் தேவா இல்லாததால் இதை வேறு யாரும் விசாரிக்க முடியாது அவர் வந்தவுடன் வந்து பாருங்கள் என்று மற்ற காவலர்கள் கூறியதாகவும் அதன்படி நேற்று இரவு வரை மூன்று முறை காவல் நிலையத்தில் காத்து நின்றுவிட்டு வந்ததாகவும் இன்று மீண்டும் காவல் நிலையம் செல்ல இருப்பதாகவும் நம்மிடம் செல்வபாரதி கூறினார்.
தஞ்சையில் முக்கிய பகுதியில் இப்படி தொடர் திருட்டு நடைபெறுவதும் அது கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் பொது மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக காவலர்களை போட்டு காவல் காக்க முடியாது என்பது தான் நிதர்சனம் ஆனால் இதுவரை ஒருமுறைகூட திருடர்களை கண்டுபிடிக்க முடியாதது காவல் துறையினரின் அலட்சியமா அல்லது திருடர்களின் அதி புத்திசாலித்தனம்மா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. இந்த முறையாவது காலம் தாழ்த்தாமல் சரியாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. கண்டுபிடிக்குமா காவல்துறை பொறுத்திருந்து பார்ப்போம்.
