Spread the love

மாநாடு 9 August 2022

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வாக்குகளை வாங்கி திமுக வெற்றி பெற்றது. அதன்படி கடந்த 50 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த எடப்பாடி நகராட்சியை திமுக விடும் நடந்து முடிந்த தேர்தலில் இழந்தது. அதுவும் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்தது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 2022ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 17, அதிமுக 13 என வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து திமுகவின் டி.எம்.எஸ். பாட்ஷா நகர் மன்ற தலைவராக இருக்கிறார். நகர்மன்ற தலைவர் பாட்ஷா மற்றும் ஆணையரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக எடப்பாடி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எடப்பாடி நகராட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் தொடர்ச்சியான தலித் விரோத போக்கிற்கு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது . அதனையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநிலச் செயலாளர் இமயவர்மன் பேசியதாவது: எடப்பாடி நகராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஏனெனில் எங்களுக்கு மட்டும் பிளக்ஸ் மற்றும் சுவரில் எழுதுவதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள்.

ஆனால் அதிமுகவிற்கு பிளக்ஸ் மற்றும் கொடிகள் வைக்க அனுமதி அளித்துள்ளார்கள். எடப்பாடியில் எங்கு பார்த்தாலும் கொடிகள் பறக்கின்றன. எடப்பாடியில் அதிமுக ஆட்சி நடைபெறுவது போல் தோற்றம் உருவாகி உள்ளது. இந்த விஷயத்தில் எடப்பாடி நகர மன்ற தலைவர் பாட்ஷா துணை போகிறார். இதனை விடுதலை சிறுத்தை கட்சி வேடிக்கை பார்க்காது. எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் பேசுகையில் உங்களால் பணி நீக்கம் செய்த 30 தூய்மை பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும். வேறு ஊர்களுக்கு பணி மாறுதல் செய்தவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும். இல்லையெனில் எடப்பாடி நகராட்சி மட்டுமல்ல, சேலம் மாநகராட்சி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால் எடப்பாடி நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

46711cookie-checkஅதிமுக திமுக கூட்டு விசிக போராட்டம் பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!