Spread the love

மக்கள் பாதுகாப்புக்கு உதவும் செக்யூரிட்டி நிறுவனங்கள்

இந்தியாவில் 16,427 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது.
இதில் தமிழ்நாட்டில் 826 பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது நாடு முழுதும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் எண்ணிக்கை பெருகி உள்ளன.அரசின் காவல்துறையினரின் பாதுகாப்பு அனைவருக்கும் வழங்க முடியாது என்பதால், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிறுவனங்களுக்கு தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்படுகின்றனர்.இதன் காரணமாக நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகின்றது.செக்யூரிட்டி தொழிலை முறைப்படுத்தும் வகையில், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக,மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே விரிவான விதிகளை வெளியிட்டுள்ளது. பொது சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினர் விஜயகுமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய உள்துறை சார்பில்,இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்து மூலம் அளித்துள்ளார். அந்தப்பதிலில் ஜனவரி 28-01-2022 நிலவரப்படி இந்தியாவில் 16,427 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2821 குஜராத்தில் 2203 ராஜஸ்தானில் 1228 தமிழ்நாட்டில் 826 செக்யூரிட்டி நிறுவனங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

13950cookie-checkமக்களை காக்க அங்கீகரிக்கப்பட்ட செக்யூரிட்டி நிறுவனங்கள் நாடாளுமன்ற தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!