மாநாடு 5 May 2022
கொரனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்க முடியாத சூழ்நிலையில் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது இந்த ஆண்டு நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பள்ளிகள் இயங்க ஆரம்பித்தது அதனைத் தொடர்ந்து தேர்வுகளும் நடைபெறுகிறது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு 3119 மையங்களில் நடைபெறுகிறது 8 லட்சத்து 37 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளார்கள். முன்னதாக தேர்வு எழுதும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இப்போது முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்வின் முதல் நாளான இன்று மாணவ,மாணவிகள் 9.30 மணிக்கே தேர்வு கூடங்களுக்கு வந்தனர்.10 மணிக்கு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன.பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முழுமையாக நடைபெறுகிறது.
மாணவ மாணவிகள் தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெற மாநாடு இதழ் வாழ்த்துகிறது