Spread the love

ராகுல்காந்தியும் தமிழரானார் 

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது தமிழ்நாட்டைப்பற்றி பேசினார். பாஜகவால் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று பேசிய போது மக்களவையில் சலசலப்பு உண்டாக்கியது.அதே வேளையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் அதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினார்கள்.

இந்நிலையில் தமிழகத்தைப்பற்றி ராகுல் பேசியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் கருத்தை அழுத்தமான முறையில் வெளிப்படுத்திய புரட்சிகரமான ராகுலின் பேச்சுக்கு நன்றி என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

பேசி முடித்துவிட்டு ராகுல் காந்தி அவர்கள் வெளியே வரும்போது பத்திரிக்கையாளர்கள் ஏன் இவ்வளவு ஆவேசமாக பேசினீர்கள் தமிழர்களுக்காக என்று கேள்வி எழுப்பிய போது.

நான் தமிழன் என்று ராகுல்காந்தி கூறிச்சென்றார் இதைப்பற்றி தமிழுணர்வாளர்களிடம் கேட்கும்போது இப்போதெல்லாம் தமிழர்கள் தங்களைத்தமிழர்கள் என்று சொல்வதைவிட தமிழர்களால் ஆதாயம் அடைய வேண்டும் என்பவர்களே அதிகமாக தங்களைத்தமிழர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேற்று மொழி நடிகர் கூட நானும் மதுரகாரன் தாண்டா என்று பேசுவதும் வேற்று மாநிலத்தில் பிறந்து இங்கு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கூட கடந்த காலங்களில் எப்போதும் இல்லாமல் அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவதாக சொன்ன பிறகு நானும் தமிழன் தான் என்று அவரும் சொன்னது அனைவருக்குமே நினைவிலிருக்கும்.

இதே போல தான் தமிழ் தேசிய அமைப்புகள் அமைத்தாலும், தமிழ்தேசிய கட்சிகளாக அமைந்தாலும் கூட நாங்களும் தமிழர்கள்தான் என்று தமிழர்களை ஆள வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது எங்களைப்போன்ற தமிழ் உணர்வாளர்களுக்கு தோன்றுவது என்னவென்றால் தமிழர்களுக்காக உழைக்க நாங்களெல்லாம் இருக்கும்போது எங்களை வைத்து பிழைக்க வந்தவர்கள்,உழைக்க வந்தவர்கள் போல வேஷம் போடுவதும் அதை தமிழ் தலைமைகள் நம்புவதும் தமிழ் இனத்தின் சாபக்கேடு என்று தான் தோன்றுகிறது.இப்போது அதிலும் ஒருபடி மேலே சென்று நான் மாற்று இனத்தவர் தான் ஆனாலும் தமிழர்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன் என்று கூறி தலைமைப்பொறுப்புகளுக்கு வருவது இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது.

ஆனாலும் தமிழர்கள் நினைவில் நிறுத்த வேண்டியது பாரதிய ஜனதாவும், காங்கிரசும் ஒரு போதும் தமிழர்களுக்கான கட்சி அல்ல என்று கூறினார்கள்.

14270cookie-checkஒரு வார்த்தையில் தமிழரானார் ராகுல்காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!