மாநாடு 7 September 2022
தொடர்ந்து நடைபெற்று முடிந்த பல தேர்தலிலும், பல மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது,அதன் காரணமாக ராகுல் காந்தி தலைவர் பதவியை மேற்கொண்டு ராஜினாமா செய்தார்.பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அதனை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடம் இருக்கிறது.
அதுவும்2024 இல் பாராளுமன்றத் தேர்தல் நெருங்குகிற இவ்வேளையில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்கிற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்த திகழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் நுழைவாயிலில் இருந்து இன்று மாலை தொடங்கினார்.
இந்நிகழ்வை துவங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்து வாழ்த்தி இந்திய தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் ராஜஸ்தான் முதலமைச்சர் ,சத்தீஸ்கர் முதலமைச்சர் , உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள் வழியாக 3570 கிலோ மீட்டர் தொலைவிற்கு 150 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள், ராகுல் காந்தியுடன் பயணத்தில் எப்போதும் 300 பேர் பங்கேற்பார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான உணவுகள் உடைகள் உட்பட தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உண்டான கண்டெய்னர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நடைப்பயணத்தின் நோக்கம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறும்போது பண வீக்கம், வேலை வாய்ப்பின்மை, ஜிஎஸ்டி, சாதி ,மத, மொழி ,உணவு ,உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவு பட்டு கிடக்கிறது அதனை சரி செய்வதற்காகவும் இந்தியாவை ஒருங்கிணைக்கும் நோக்கோடு நடைபெறுவதே இந்த ஒற்றுமை நடைப் பயணம் என்கிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவே தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையத்தின் முன்பாக
கோ பேக் ராகுல் காந்தி என்ற முழக்கத்தோடு கையில் கருப்பு பலன்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர் இவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கையில் இருந்த கருப்பு பலன்களை பறித்தது மேலும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைப் பற்றி அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கமாக கூறப்பட்டிருப்பது அனைத்துமே சரியானது தான் ஆனாலும் கூட ஜிஎஸ்டி உட்பட பல இவர்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான் அதன் காரணமாக தான் இன்று வரை மக்கள் துன்பப்படுகிறார்கள் இதனை ஏற்றுக் கொண்டு நடைபயணத்தின் போது இவ்வாறான தவறுகள் இனி நடக்காது என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி சொல்லுமா? ராகுல் காந்தி சொல்வாரா? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்கள் மீண்டும் திரும்பப் பெறப்படுமா? இவை அனைத்தும் சரி செய்யாத போது உண்மை நிலையை ஒத்துக் கொண்டு வாக்குறுதி கூட கொடுக்காத காங்கிரசின் இந்த நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு எப்படி வலு சேர்க்கும்? ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் என்று நடப்பதனால் மேற்கூறிய அனைத்தும் எப்படி சரி செய்யப்படும்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளை ஆதங்கத்தோடு நம்மிடையே கூறிய அரசியல் நோக்கர் வேடிக்கையாக இன்னொன்றையும் நம்மிடம் முன் வைத்தார்கள் அஜித் குமார் நடித்த ஒரு படத்தில் ஒரு ஆட்டோவின் கண்ணாடியை திருப்பினால் இன்னொரு ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்று கதாநாயகன் காமெடியனை ஏமாற்றுவாரே அந்த காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதே போல தான் ராகுல் காந்தி நடந்து இவை அனைத்தையும் சரி செய்வேன் என்பது என்று முடித்தார்.
தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்ட பல கட்சித் தலைவர்களும் தோல்வியை தான் கண்டிருக்கிறார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார் இது என்ன நிகழ்வை ஏற்படுத்தும் என்பதை காலம் உணர்த்தும் பொறுத்திருப்போம்.