மாநாடு 3 June 2022
இந்தியாவில் தினந்தோறும் போக்குவரத்திற்காக அதிக மக்கள் பயணம் செய்வது ரயிலில் தான் காரணம் பேருந்தை ஒப்பிடும்போது இதன் கட்டணம் மிகவும் குறைவு.
அதேபோல எந்த போக்குவரத்தை ஒப்பிடும் போதும் இதன் கட்டணம் குறைவாகவே இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு அதிகமாக உடைமைகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று ரயிலில்தான் பயணம் செய்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம்.
வெளியூர்களுக்கு செல்பவர்கள் அதிகமாக லக்கேஜ்களை தங்களோடு எடுத்துச் செல்ல வேறு எந்தவித பொது போக்குவரத்தும் அனுமதிக்காது ஆனால் ரயிலில் எவ்வளவு லக்கேஜ்களை வேண்டுமென்றாலும் இதுவரை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். ஆனால் பேருந்துகளில் ஒரு அளவிற்கு மேல் லக்கேஜ்களை ஏற்றினால் நடத்துனர் அதற்காக தனியாக பயணச்சீட்டு தருவார் அல்லவா.
அதேபோல ஒரு நடைமுறையை தற்போது ரயில்வே துறையில் கொண்டு வந்திருக்கிறது அதன் காரணமாக குறிப்பிட்ட அளவுக்கு மேலும் லக்கேஜ்களை ஏற்றக்கடாது என்று தெரிவித்திருக்கிறது அதனை மீறி அதிக அளவு எடை கொண்ட பொருட்களை எடுத்துச் சென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப் படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தனது அதிகார பக்க சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறது பயணிகள் சில நேரங்களில் அதிகமாக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் பார்சல் நிறுவனத்திற்கு சென்று முன்பதிவு செய்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது,
இந்திய ரயில்வே விதிகளின்படி, ஓர் பயணி அவர் பயணிக்கும் வகுப்பைப் பொருத்து 40 கிலோ முதல் 70 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை எந்த தடையுமின்றி அவருடன் சேர்த்து ரயில் பெட்டியில் எடுத்துச் செல்லலாம். இந்த குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனில் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் பயணம் செய்யும் வகுப்பு வாரியாக பொருட்களை எடுத்துச் செல்லலாம் அதன் எடைகள் பட்டியல் :
நீங்கள் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணி என்றால் உங்களுடன் 40 கிலோ வரை எடையுள்ள பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இதேபோல், ஏசி பெட்டியில் பயணிப்பவராக இருந்தால் நீங்கள் 50 கிலோ வரையுள்ள எடைக் கொண்ட லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பவர்கள் அதிகபட்சமாக 70 கிலோ வரை அவர்களது உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும். என அறிவித்திருக்கிறது.