மாநாடு 8 ஜீன் 2023
நேற்று இரவு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் திடிரென பலத்த சூரைக் காற்று வீசத் தொடங்கியது சற்று நேரத்தில் கனமழை பெய்தது இதை சற்றும் எதிர் பார்க்காத பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இந்நிலையில் பேராவூரணி பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புரம் உள்ள கபிலன் என்பவரின் வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து வீட்டின் தாழ்வாரப் பகுதியில் விழுந்தது இதில் அதிர்ஸ்ட் டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் சிறுவர்களின் சைக்கிள்கள் இரண்டு சேதமடைந்து உள்ளது. மரம் வெட்டும் ஆட்களை வரவழைத்து விழுந்த மரங்களை அப்புரப் படுத்தும் பணி நடைப்பெற்றது
செய்தி : த.நீலகண்டன்
703230cookie-checkசூறைக் காற்றுடன் திடீர் மழை
