மாநாடு 07 August 2023
கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் அந்த நாளில் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஏதோ ஒரு தவிப்பு படபடப்பு பற்றிக்கொள்ள… வந்த வேலை முடிக்க ஓடிக்கொண்டிருக்கும் எனக்கு மிகப் பெரிய மன அழுத்தமாக இருந்தது எவ்வளவோ விமர்சனங்கள் செய்திருக்கிறேன்… வியாக்கியானங்களும் பண்ணியிருக்கிறேன் …,வார்த்தை விளையாட்டுகளை கூட அந்த வித்தகனிடம் கற்று இருக்கிறேன்.
சண்டை பிடிக்கவும்… சடுகுடு ஆடவும் கூட தகுதியானவர்கள் தேவை … நான் சண்டை பிடிக்க தகுதியானவர் நீதானே ? நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் போது சாவை ஏன் தழுவினாய் என்று தேம்பி அழுது எழுதும்போது வந்த வார்த்தைகளை அன்று பதிவிட எனக்கென்று ஊடகம் இல்லை என் முகநூலில் பதிவிட்டேன் அதையே இன்று பதிவிடுகிறேன் இதோ அது ….
பிறப்பவர் எல்லாம் இருப்பவர் இல்ல..
இருப்பவர் எல்லாம் நிலைப்பதும் இல்ல..
காலத்துக்கு முன் நாமெல்லாம் ஒரு பொருட்டே இல்ல
வேற எதுவும் இப்ப சொல்றதுக்கும் இல்ல..
#அன்று
கடுப்பா நான் பார்த்த போதெல்லாம்
கை அசைத்து சென்றவரே
#இன்று
கருணையோடு பார்க்கிறேன் உன்
கள்ள சிரிப்பும் இல்ல
கை அசைவும் இல்ல
கர ..கர.. குரலும் இல்ல
நான் கொண்ட கோபம் எல்லாம்
உன் மேல் கொண்ட நேசம் தானே ஐயா
அப்போதும் இப்போதும் உங்களை நேசிக்கிறேன் ஐயா
ஒவ்வொருவர் மரணமும் எனக்கு எதாவது
ஒரு பாடம் சொல்லும் உங்கள் மரணமும் அப்படியே …
ஓய்வரியா சூரியனே …
ஓய்வெடுக்க செல்லுங்கள் !
உங்களுக்காவது இத்தனை பேரு…
எனக்கெல்லாம் யாரு??
_இராம்குமார்