மாநாடு 16 December 2022
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர அதிமுக சார்பாக பால்விலை, மின் கட்டன உயர்வு, சொத்துவரி உயர்வு உள்பட அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் தியாகை பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பால்விலை, மின் கட்டன உயர்வு, சொத்துவரி உயர்வை வாபஸ் பெற கோரியும், விலைவாசியை கட்டுபடுத்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் கையில் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் நகர செயலர் சின்னையன் நன்றி கூறினார் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சபேசன், அன்பு, ஜெனட்ஆனந்தி, அப்துல்காதர், வக்கீல் சரவணன், பாலு, செல்வ சந்தியாகு ஜம்புலிங்கம் மாவட்ட பிரதிநிதி மணி, ஏ.ரசீது உள்பட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி – இராஜராஜன்