Spread the love

மாநாடு 23 March 2022

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மார்ச் 28, 29 ஆகிய நாட்களில் பல்வேறு ஊழியர்கள் கூட்டமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் இவ்விரண்டு நாட்களில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற இரப்பதால் அன்றைய நாட்களில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம்.அன்று வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் சரியாக நடக்கத் தேவையான நடவடிக்கைகள் வங்கிகளிலும் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக வங்கிச் சேவைகளில் ஏற்படும் பாதிப்பால் எவ்வளவு இழப்பு வங்கிக்கு ஏற்படும் என்று மதிப்பிடப்படவில்லை என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பு IBA அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு AIBEA, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு AIBOA சார்பாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இந்திய பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நீண்ட காலமாகவே வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

வங்கிகள் மட்டுமல்லம், இன்சூரன்ஸ், விமானம் போன்ற அரசு நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கு விற்பனை மூலமாகத் தனியார்மயமாக்கி வருகிறது மத்திய அரசு. இதனால் அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகிறது. எனவே தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டங்கள் தொடர்கின்றன.

வாடிக்கையாளர்கள் இவ்விரண்டு நாட்களிலும் வங்கி பண பரிவர்த்தனையை பெரிதாக நம்பாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

26540cookie-checkவங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது வங்கி அறிவிப்பு

Leave a Reply

error: Content is protected !!