Spread the love

கூட்டுறவு வங்கியில் 1.64 கோடி மோசடி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் ம.கலைச்செல்வி (58) கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பி.வி.ஜெயஸ்ரீ (51) நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் ஜெ.விஜயகுமார் (47) இவர்கள் 3 பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளைப் பெற்றுக்கொண்டு ரூ.1,64,83,500 நகைக்கடன் வழங்கியுள்ளார்கள்.

வங்கி கணக்கு தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கத்துணைப்பதிவாளர் சுவாதிக்கு இது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்திருக்கிறார்

அந்த புகார் காஞ்சிபுரத்தில் உள்ள வணிககுற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. முரளியிடம் விசாரணைக்கு வந்துள்ளது.

டி.எஸ்.பி.முரளி மற்றும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரூ.1.64 கோடி மோசடி செய்திருப்பது உண்மை எனத்தெரிய வந்ததிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வங்கியின் செயலாளர் ம.கலைச்செல்வி சென்னை புழல் சிறையிலும், நகை மதிப்பீட்டாளர் ஜெ.விஜயகுமார் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளரான பி.வி.ஜெயஸ்ரீ தலைமறைவானதை தொடர்ந்து அவரை ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான போலீசார் தேடி வருகின்றார்களாம்.

இந்நிலையில் கூட்டுறவு சங்கத்துணைப்பதிவாளர் சுவாதி 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் வணிக குற்றப்புலானாய்வுப் பிரிவு ஆய்வாளர் தேன்மொழி விரிவான விசாரணையும் நடத்தி வருகிறாராம்.

10320cookie-checkமோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!