Spread the love

மாநாடு 19 July 2024

ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வியையும், மருத்துவத்தையும் தர வேண்டியது அரசின் கடமை , அதை பெற வேண்டியது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று பல அறிஞர் பெருமக்களும், சமூக ஆர்வலர்களும் எடுத்துக் கூறி வந்த நிலையில் பல பள்ளிகள் பள்ளிக்கூடங்கள் என்பதை மறந்து விட்டு பள்ளிக் கூண்டுகள் கட்டி கல்லா கட்டுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருப்பதை பலரும் பார்த்தும் தட்டிக் கேட்க துணிவும், நேரமும் இல்லாததால் ஓடி… ஓடி உழைத்து களைத்து குழந்தைகளை கவனித்து படிக்க வைத்து குடும்பங்கள் நடத்துவதே தன் கடமை என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே கசப்பான எதார்த்த உண்மை.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது அது யாதெனில் அனைத்து பள்ளி நிறுவனங்களுக்கும் நீங்கள் ( மாநில அரசு) சுற்றறிக்கை அனுப்புங்கள் என்று கூறியுள்ள உத்தரவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது .

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் டீசியில் அந்தப் பள்ளிக்கு கட்டணம் செலுத்தாதது அல்லது தாமதமாக கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட தேவையற்ற பதிவுகளை பள்ளிக் குழந்தையின் மாற்றுச் சான்றிதழில் ( TC ) பதிவுகள் செய்யக்கூடாது பெற்றோர்களிடமிருந்து பள்ளி கட்டணத்தை வசூலிக்க பள்ளிகளுக்கு குழந்தைகளின் டீசி ஒரு கருவி அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு பள்ளி மாற்றுச் சான்றிதழில்( TC ) கட்டணபாக்கியை பதிவு செய்தால் அது குழந்தைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும் இவ்வாறு பதிவு செய்வது கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிரிவு 17ன் கீழ் ஒரு வகையான மன ரீதியாக குழந்தைகளை துன்புறுத்தும் செயலாகும் என்கிறார்கள்.

மேலும் பெற்றோரின் நிதித்திறனை எடை போட, பள்ளிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க குழந்தையின் டீசி ஒரு கருவியல்ல குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும் டீசி அக்குழந்தையின் தனிப்பட்ட ஆவணமாகும். டீசியில் தேவையற்ற பதிவுகளை பதிவதன் மூலம் பள்ளிகள் தங்களின் சொந்த பிரச்சனைகளை குழந்தையின் மீது வைக்கக் கூடாது பெற்றோர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குழந்தைகள் என்ன செய்வார்கள் ?அது குழந்தைகளின் தவறல்ல என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் இதன் பிறகும் டீசியில் ஏதேனும் தேவையற்ற பதிவு செய்யப்பட்டால் RTE சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைத்து பள்ளி நிறுவனங்களுக்கும் மாநில அரசு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

படிப்பு என்பது பிறப்புரிமை ! பழி சுமத்தி அதை தடுப்பது என்பது கொடுமையிலும் பெருங்கொடுமை ! இனியாவது பல பள்ளிகள் திருந்துமா ?

74590cookie-checkசென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு எந்த பள்ளிகளும் இதை செய்யக்கூடாது

Leave a Reply

error: Content is protected !!