மாநாடு 19 February 2022
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதல் மக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரது வாக்கை டி ஆர் பி பாலசுப்ரமணியன் என்பவரின் மனைவி மஞ்சுளாதேவி திமுக வேட்பாளர் செலுத்தியதாக புகார் எழுந்தது.
இதனை மற்ற கட்சி வேட்பாளர்கள் விசாரித்த போது அது உண்மை என தெரிய வந்தது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டி மீனா அவர்களிடம் நாம் கேட்டபோது.
திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி முதலில் தனது வாக்கை செலுத்திவிட்டு அடுத்த வரிசைக்கு வந்து முத்துலட்சுமி என்பவரின் வாாக்கையும் செலுத்தியுள்ளார். இது ஒரு வகையில் இங்கு இருக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரியாக கண்காணிக்காததும் ஒரு காரணம். இப்படி சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் எப்படி இரண்டு முறை தனது வாக்கை செலுத்த முடியும்.
இது தேர்தல் விதிமுறையை அத்துமீறும் செயல்,அதனால் கள்ள ஓட்டுப் போட்ட திமுக வேட்பாளர் மீது தகுந்த நடவடிக்கை சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டப்படி வேட்பாளர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது சட்டத்தை மதிக்கின்ற அதிகாரிகள் இவ்வாறான அத்துமீறலில் ஈடுபட்ட திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
இது சம்பந்தமாக தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சை வேட்பாளர்களும் புகார் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொருத்தே நடைபெறுகிற தேர்தல் ஜனநாயகத்தை காக்க வா அல்லது பணக்காரர்களை பாதுகாக்க வா என்று சாமானிய வாக்காளருக்கு தெரியவரும்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.