மாநாடு 2 April 2022
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதை கண்டித்து மக்களின் பக்கம் நிற்ப்பதற்காக அப்பகுதி மக்களை சந்திப்பதற்கு சென்றார். அப்போது நெடுநேரமாக வெயிலில் நின்று பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை செய்தி கூறியிருப்பதாவது :
இவ்வாறு கட்டிடங்களை இடிப்பதை கண்டிக்க சென்ற இடத்தில் நெடு நேரம் வெயிலில் நின்றதாலும், ஓய்வின்றி தினந்தோறும் கூட்டங்களில் பேசுவதும், கட்சிக்காரர்களை சந்திப்பதும் ,பொது நிகழ்வுகளில் ஈடுபடுவதும், தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால் உடல் மிகவும் சோர்வுடன் இருந்ததாகவும் இப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி என்பது தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும் கூட இன்றும் ஒற்றை மனிதர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மட்டுமே அனைத்து நிகழ்வுகளிலும் ஈடுபடுத்துவது அனைத்து கூட்டங்களுக்கும் அவரையே அழைப்பது என்பதும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் பலர் இன்னுமும் கூட முழு அரசியலை கற்றுக் கொள்ளவில்லை என்பதும் பக்குவமற்ற நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதும், தங்களுக்கான குழுவை தான் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் ,அவரை அலைக்கழித்து இந்த நிலையில் வைத்துள்ளது மூலம் தெரியவருகிறது. இனியாவது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உழைப்பிலும் உளமார மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட வேண்டும் என்பதே உண்மை கட்சிக்காரர்களின் வேண்டுகோளாக உள்ளது.