Spread the love

மாநாடு 16 December 2022

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் விளையாட்டு வேலை நேரங்களில் விளையாடுவதை தடுத்து வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் ஈரோட்டில் உள்ள திண்டல் வேளாளர் கல்லூரியில் நடைபெற்ற புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைப்பதற்காக வந்த அமைச்சர் திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் பேசியபோது இதனை தெரிவித்தார்.

மேலும் புதிய கல்விக் கொள்கைக்கான ஆய்வு தமிழ்நாட்டில் முடிவடைந்து இருக்கிறது , இப்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது, இதுவும் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்து விடும் அதன் ஆய்வு அறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்படும், அதன்படி அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவுகளை முதல்வர் எடுப்பார் என்றும் நடப்பாண்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் , இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார், அதற்கான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, பள்ளிக் குழந்தைகள் எவ்வித தீய பழக்கங்களிலும் ஈடுபட்டு விடக்கூடாது என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் சசிகலா ஈரோடு மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

58950cookie-checkஅமைச்சர் அதிரடி பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதை தடுக்கக் கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!