Spread the love

மாநாடு 9 February 2022

இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

தமிழக மீனவர்களைக்கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது.இதை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன. அப்போது இந்த நடவடிக்கை சற்று குறைந்து மீண்டும் தொடங்குவது அடிக்கடி நடைபெறுகிறது.

இவ்வாறு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளைத்திரும்ப அவர்களிடம் அளிக்க வேண்டும் எனத்தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தது.செவிசாய்க்காத இலங்கை அரசு இவ்வாறு பறிமுதல் செய்யப்பட 105 படகுகளை ஏலம் விட்டு வருகிறது.இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.மேலும் அவர்கள் சென்ற 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இலங்கை அரசைக்கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்

16300cookie-checkநாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!