மாநாடு 18 August 2022
சமீப காலமாக சிறுவர்கள் இளைஞர்கள் என பெரும்பான்மையானோர் விரும்பத் தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூகத்தின் மீது கொஞ்சமும் அக்கறையற்ற இவர்களால் ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கி தலை குனிய வேண்டி இருக்கிறது, இது போன்றவர்களால் பல நேரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது,
இது போன்ற நிகழ்வு ஒன்று பீகார் மாநிலத்தில் நடைபெற்று பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது, கடந்த புதன்கிழமை பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் சிப்பாரா காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட இந்திரபுரி என்கிற தெருவில் 15 வயது மாணவியும் ஒரு மாணவரும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள், அப்போது அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து அந்த மாணவி அந்த மாணவனை விட்டு விலகி நடந்து சென்று இருக்கிறார், அந்த மாணவியை தடுத்து பேச முயற்சித்து இருக்கிறார் அந்த மாணவர், மாணவி பேச மறுத்ததாக தெரிய வருகிறது, அதனைத் தொடர்ந்து மாணவர் பையில் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து மாணவியை சுட்டுவிட்டு தப்பி ஓடி இருக்கிறார், ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தெரிய வருகிறது.